• Apr 27 2024

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து மாற்றப்பட்ட ஸ்வேதா கதாபாத்திரம்... இனி அவருக்குப் பதில் இவரா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் மனங்களை அதிகளவில் கவர்ந்தவை என்றால் அது சீரிலயல்கள் தான். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது.

அந்தவகையில் 3 வருடங்களுக்கு மேலாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு சீரியல் தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. அதாவது 4 அண்ணன்-தம்பிகளின் ஒற்றுமையையும் கூட்டுக் குடும்பத்தின் அழகையும் இந்த சீரியல் மிகவும் அழகாக வெளிக்காட்டுகிறது.


மேலும் மக்கள் நிஜத்தில் அப்படி இருக்க முடியவில்லை என்றாலும் சீரியலை பார்த்து இப்படியெல்லாம் அழகாக கூட்டுக் குடும்பம் இருக்குமா என ரசித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்போது இந்தத் தொடரில் மூர்த்தி-தனம் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.


அதுமட்டுமல்லாமல் சீரியல் ஆரம்பித்ததில் இருந்து நிறைய நடிகர், நடிகைகள் மாற்றம் நடந்துள்ளது. அதில் முல்லை கதாபாத்திரம், ஐஸ்வர்யா கதாபாத்திரம், ஜனார்த்தனன் கதாபாத்திரம் என நிறைய நடிகர்கள் உடைய மாற்றங்கள் நடந்துள்ளது.

அந்தவகையில் தற்போது மீனாவின் தங்கையாக நடித்த ஸ்வேதா கதாபாத்திரத்திலும் மாற்றம் நடந்துள்ளது. அதாவது புதிய ஐஸ்வர்யாவாக நடிக்கப்போகும் நடிகையின் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இதோ அந்தப் புகைப்படம்..!



Advertisement

Advertisement

Advertisement