• Apr 27 2024

பிரின்ஸ்க்கு போட்டியாக வெளிவந்த சர்தார்... 11நாள் முடிவில் காட்டிய மாஸ் சாதனை...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. இவர் சமீபகாலமாகவே மிகவும் தரமான படங்களாக கொடுத்து சாதனை செய்து வந்த வண்ணம் இருக்கின்றார்.அதுமட்டுமல்லாது வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிப்பதிலும் வல்லவராக விளங்கி வருகின்றார்.


இந்த வருடத்தில் மட்டும் கார்த்தியின் நடிப்பில் 'பொன்னியின் செல்வன், சர்தார்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. இதில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியன்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் கார்த்தி. மேலும் இப்படமானது உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வரை வசூல் சாதனை செய்தது. 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'சர்தார்' திரைப்படமும் வசூலில் செம கலெக்ஷன் பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றது. மேலும் முதல் வாரத்தில் 380 திரையில் திரையிடப்பட்ட சர்தார் திரைப்படமானது 2ஆவது வாரத்தில் 500 திரைகளில் ஒளிபரப்பாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இதற்கு முக்கிய காரணம் பட விமர்சனங்கள் தான். அதாவது சிறந்த விமர்சனங்கள் அமோகமாக வர அதிக திரையரங்குகளில் சர்தார் ஒளிபரப்பாகி இருக்கின்றது.

அந்தவகையில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி வெளியான இப்படமானது ரூ. 40 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. தற்போது 11 நாட்கள் நிறைவு செய்துள்ள நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரு. 85 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement