• Jan 18 2025

நல்ல படம் கொடுத்தும் நட்டாற்றில் விட்டுட்டாங்களே.. புலம்பும் நடிகர் சந்தானம்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றபோதும் அந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை மிகவும் குறைவான தொகைக்கு போனதை அடுத்து சந்தானம் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் இந்த படம் திரையரங்குகளில் ஓரளவு நல்ல வசூலை செய்தது. 

மேலும் ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டையும் வாங்கிய ஒரு முன்னணி நிறுவனம் மிகக்குறைந்த விலைக்கு தான் வாங்கி உள்ளதாகவும் மற்ற நிறுவனங்கள் அந்த விலைக்கு கூட கேட்காததால் வேறு வழியின்றி வந்த விலைக்கு இந்த படத்தை தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஒரு நல்ல படம் கொடுத்தும் திரையரங்குகளில் ஓரளவு நல்ல வசூல் ஆகியும் நம்மை நட்டாற்றில் விட்டு விட்டார்களே என்று சந்தானம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் கடந்த சில வருடங்களாக நடிகர் சந்தானம் பாஜக ஆதரவாக குரல் கொடுத்து வருவதே என்றும் ஒரு நடிகரை ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் சாயலில் சிக்கிவிட்டால் இதுதான் நடக்கும் என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement