• Jan 15 2025

விஜய் இல்லாமல் புதிய படத்தின் பூஜையை நடத்தி முடித்த சஞ்சய்- கடும் கோபத்தில் தளபதி ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். உலகளாவிய ரீதியில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் இறுதியாக லியோ என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது தளபதி 68 படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, தாய்லாந்து ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. இது ஒரு புறம் இருக்க இவரின் மகனான  சஞ்சய்யும் தற்போது சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் தன்னுடைய தந்தையின் வேட்டைக்காரன் படத்தில் நா அடிச்சா தாங்க மாட்ட பாடலில் முன்னதாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.


 தொடர்ந்து இவர் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் சஞ்சய்யை நாயகனாக அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.ஆனால் தான் நடிகராக இல்லாமல் இயக்குநராக மாற விரும்புவதாக சஞ்சய் உறுதியாக கூறிவிட்டார். 

இந்நிலையில் சில குறும்படங்களையும் இயக்கியுள்ள சஞ்சய், தற்போது லைகா தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜையை சைலண்டாக லைகா நிறுவனம் போட்டுள்ளது. போயஸ் கார்டனில் போடப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில இந்தப்படத்தின் பூஜை நடந்துள்ளது. இந்தப் பூஜையில் விஜய் பங்கேற்காத நிலையில் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement