• Dec 08 2023

வீட்டுக்கு வந்த பாக்கியாவிடம் அமிர்தா கேட்ட கேள்வி- திட்டித் தீர்த்த இனியா- ஈஸ்வரி எடுத்த முடிவு- Baakiyalakshmi Serial

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி, இனியாவை ஷாப்பிங் கூட்டிட்டு போனதற்காக ராதிகாவுக்கு தாங்ஸ் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அப்போது அங்கு பாக்கியா வர ஹாலில் உட்கார்ந்து இருக்கும் இனியா திட்டுகின்றார். என்னை மறந்திட்ட தானே ஈவினிங் பங்சன் ஒன்றுக்கு போக ஷாப்பிங் போகனும் என்று சொன்னனே,இப்போ எல்லாம் உனக்கு என் நினைவே இல்லை எனத் திட்டுகின்றார்.


இதனால் கோபமடைந்த எழில் இனியாவைத் திட்ட, அந்த நேரம் எல்லோரும் வந்து விடுகின்றனர். அப்போது அமிர்தா கான்டீன் கான்ராக்ட் பற்றிக் கேட்கின்றார்.அப்போது கான்ராக்டை குலுக்கல் முறையில் வேறொருத்தங்களுக்கு கொடுத்திட்டாங்க என்று சொல்ல ஈஸ்வரி அப்போ கொடுத்த பணம் என் ஆச்சு என்று கேட்கின்றார்.

பாக்கியா பணத்தை கொஞ்ச நாள்ல கொடுத்திடுவாங்க என்கின்றார்.அதற்கு ஈஸ்வரி அவங்க அப்பிடி எல்லாம் கொடுக்கமாட்டாங்க, நீ எதுவும் பண்ண வேணாம் வீட்டிலையே இரு, வீட்டு செலவை பார்க்க இவரோட பென்சன் பணம் இருக்கு, செழியன் எழில் இருக்கிறாங்க என்று சொல்ல ராதிகா தானும் தன்னுடைய பங்கைக் கொடுக்கிறேன் என்கின்றார்.


அப்போது பாக்கியா யாரும் பணம் கொடுக்க வேணாம் நானே பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லி விட்டு போக, பாக்கியாவிடம் சென்றுகோபி நக்கலடிக்க பாக்கியா இப்பிடியே இருந்திட மாட்டேன். சீக்கிரமாக இதிலிருந்து மீண்டு வருவேன் என்று சொல்லி விட்டு போகின்றார். பின்னர் கோபி துாங்குவதற்காக ரூமுக்குள் வந்து ராதிகாவுடன் பேசிட்டு இருக்க ஈஸ்வரியும் வருகின்றார்.


அவர் கோபிக்கு பக்கத்தில் படுத்துக் கொண்டு பாக்கியா செய்வது பிழை என்று பேசிக் கொண்டிருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement