தமிழ் சினிமாவில் நடித்ததன் மூலம் மக்களிடம் பெரும் புகழ் பெற்றுக் கொண்ட நடிகர் ரவி மோகன் தற்பொழுது தனது தனிப்பட்ட வாழ்க்கையாலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றார். இன்று அவரது குடும்ப வாழ்வும் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றது. ‘ஜெயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பல ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி, சமீபமாக காலமாக தனது குடும்ப வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றார்.
அந்தவகையில், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசின் மகள் ப்ரீத்தா திருமண விழா பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. இந்தக் கல்யாண விழாவில் சினிமா துறையின் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஒரு விடயம்தான். அது என்னவெனில் ஜெயம் ரவி தனக்குத் தோழி என அறிமுகம் செய்யப்பட்ட கெனிஷாவுடன் அங்கு சென்றுள்ளார்.
கெனிஷா, சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் இளம் பெண். அத்துடன் இவர் சிறந்த பாடகியாகவும் மக்களின் மனங்களைக் கவர்ந்துள்ளார். இந்நிகழ்வில் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா சேர்ந்து ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியை 2009ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த மாதம் இவர்கள் இருவரும் தங்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து கொண்டனர்.
இதன்பின் ரவி மோகன் இப்படி கெனிஷாவுடன் ஜோடி போட்டு வந்துள்ளமை அனைவரையும் ஜோசிக்கவைத்துள்ளது. ஜெயம் ரவியும் கெனிஷாவும் தற்போது நண்பர்கள் மட்டுமா அல்லது காதல் ஜோடியா எனவும் பலர் கருத்துக்களை எழுப்புகின்றனர்.
Listen News!