• Jan 19 2025

16 கோடி ரூபாய் உடனே வேண்டும்.. ‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த வெளியிட்ட அவசர வீடியோ

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நாயகன் முத்து கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்த் அவசரமாக 16 கோடி ரூபாய் தேவை என்று வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’சிறகடிக்க ஆசை’ சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்று சாதனை செய்துள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நாயகன் முத்து கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்த் மிகவும் இயல்பாக மிகைப்படுத்தாமல் தனது கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வெற்றி வசந்த் சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிறு குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்த குழந்தை சிகிச்சைக்கு சில ஸ்பெஷல் மருந்துகள் தேவைப்படுவதாகவும், அது மிகவும் விலை உயர்ந்தது என்றும் ,அதன் மதிப்பு 16 கோடி என்றும் கூறியுள்ளார்.

என்னால் முடிந்த ஒரு தொகையை நான் அனுப்பியுள்ளேன் என்றும், நீங்களும் உங்களால் முடிந்த அந்த தொகையை அனுப்பி அந்த குழந்தையை காப்பாற்ற உதவி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  ரூ.16 கோடி என்பது மிகவும் பெரிய தொகை என்றாலும் நம் நாட்டின் ஜனத்தொகையை கணக்கெடுத்தால் எல்லோரும் இணைந்து ஒரு சிறிய தொகை கொடுத்தால் கூட 16 கோடி சேர்ந்து விடும் என்றும் எனவே அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த தொகையை அனுப்பி உதவி செய்யுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து பல ரசிகர்கள் எங்களால் முடிந்ததை அனுப்பி உள்ளோம் என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். அவரது இந்த நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement