• Mar 28 2023

வேறு ஒரு சேனலுக்குத் தாவிய 'ராஜா ராணி 2' சீரியல் நடிகை ரியா.. புத்தம் புது சீரியல் இதோ.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்றான 'ராஜா ராணி 2' மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் ரியா விஸ்வநாதன். இந்த சீரியலில் நடித்த ஆலியா மானசா கர்ப்பமாக இருந்ததால் இதிலிருந்து விலக்கியமையைத் தொடர்ந்து ஆலியாவுக்கு பதிலாக நடிக்க வந்தவர் தான் ரியா விஸ்வநாதன்.


'ராஜா ராணி 2' சீரியலானது நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென ரியா விஸ்வநாதனும் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து ரியாவுக்கு பதிலாக தற்போது ஆஷா கௌடா நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.


இதன் பின்னர் ரியா தன்னிடம் எதுவும் சொல்லாமல் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தன்னை வெளியேற்றி விட்டதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தி இருந்தார். இப்படியான ஒரு சூழ்நிலையில் ரியா விஸ்வநாதன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


மேலும் இந்த சீரியலுக்கு 'சண்டைக்கோழி' என டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. அத்தோடு இரட்டை ரோஜா சீரியலுக்கு பதிலாகத் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வெகுவிரைவில் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement