நாளுக்கு நாள் எதாவது ஒரு விடையம் ட்ரெண்டாகி கொண்டுதான் இருக்கிறது அப்படி இன்று நடிகர் ரஜனியின் ரசிகன் செய்த செயல் வைரலாகியுள்ளது. நடிகர் ரஜனிகாந்த் தற்போது திரைத்துறையில் நீங்காத இடம் பிடித்த முக்கிய நடிகர். இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவைதான்.
80 காலங்களில் தொடங்கி 90ல் வலம் வந்து 20ல் சூப்பர் ஸ்டாராய் மிளிர்கிறார். நடை, உடை, பாவனை, நடனம், நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். முத்து, படையப்பா, அண்ணாமலை போன்ற படங்களை இன்று திரையரங்கில் மறுபடி வெளியிட்டா கூட கூட்டம் அலைமோதும்.
"d_i_a"
அப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது இவருக்கு. அதனை அடுத்து அண்ணாத, ஜெயிலர், வேட்டையன், பேட்ட, கபாலி, லிங்கா போன்ற திரைப்படங்களை இப்போதைய தலைமுறையினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த படத்தில் வெளியான பாடல்களையும் வைப் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
கடைசியாக இவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு ஜெயலர் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி இருக்க இவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அலைமோதி சென்று அவரை பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு ரசிகன் நடிகர் ராஜனிகாந்தை சந்தித்து அவர் கையால் தனது கையில் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். அதே கையேடு டாட்டூ கடைக்கு சென்று அந்த ஆட்டோகிராப்பை பச்சை குத்தியுள்ளார். இந்த விடையம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!