• Oct 08 2024

பாவம் ரொம்ப ஏழை.. காப்பி குடிக்க துபாய் போன பூஜா ஹெக்டே.. ரசிகர்கள் கிண்டல்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா ஹெக்டே துபாயில் காபி குடிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த பதிவுக்கு கிண்டல் செய்த ரசிகர்கள் ’இந்தியாவில் காபி கடையே இல்லையா? துபாயில் தான் காபி குடிக்க வேண்டுமா? என்று கூறியதோடு அவருடைய உடையை பார்த்து ’பாவம் ஒரு நல்ல உடை வாங்க கூட காசு இல்லை போல, ரொம்ப ஏழை’ என்று பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானாலும் அதன் பின்னர் அவர் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நிலையில் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தான் பிசியாக உள்ளார். குறிப்பாக சாகித் கபூர் நடிப்பில் உருவாகி வரும் ’தேவா’ என்ற படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டேவுக்கு சுமார் 27 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது துபாய் சென்றிருக்கும் நிலையில் அங்கு காபி குடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இன்னொரு புகைப்படத்தில் பிளையிங் கிஸ் கொடுப்பது போன்ற பதிவு செய்துள்ளார்.

இந்த இரண்டு புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்கள் அவர் அணிந்திருக்கும் உடையை கேலி செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட முழு தொடையும் தெரியும் அளவுக்கு அவர் அணிந்திருந்த காஸ்ட்யூமை பார்த்து, ‘பாவம் ரொம்ப ஏழை போல, ஒரு நல்ல துணி எடுக்க கூட அவருக்கு காசு இல்லை’ என்று கூறி வருகின்றனர். மேலும் இந்தியாவில் காபி கடையே இல்லையா துபாயில் பொய் தான் காபி குடிக்க வேண்டுமா?  ‘யாராவது ஒருத்தராவது அவருடைய உதட்டை பார்த்தார்களா? எல்லோரும் தொடையை தான் பார்க்கிறார்கள்’ என்பது போன்ற கமெண்ட்ஸ் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement