• Jan 15 2025

இனி காதல் மட்டும் தான்.. கட்டன் ரைட்டா ரூட்டை மாற்றிய சூர்யா.! வெளியானது ரெட்ரோ டீசர்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 44வது திரை படத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் டீசர் என்பன வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி சூர்யாவின் 44 வது படத்திற்கு ரெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சூர்யாவின் 44வது படத்தின் டைட்டில் ஜானி என தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தது. அதன்படி ரஜினியின் நடிப்பில் வெளியான ஜானி படத்தின் டைட்டிலை தான் கார்த்திக் சுப்புராஜ் வைத்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

d_i_a

இந்த படத்தில் சூர்யாவின் கெட்டப்பும் ஜானி படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பும் ஒரே மாதிரி தான் காணப்பட்டுள்ளது. எனவே ரசிகர்களும் சூர்யா 44 வது படத்தின் டைட்டில் ஜானி என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ரெட்ரோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


ரெட்ரோ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் காதல் கலந்த ஆக்சன் படமாக இருக்கும் என தெரிய வருகின்றது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் முதல் முறையாக காதல் திரைப்படத்தை இயக்குகின்றார் என்றதும் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும்  அதிகரித்துள்ளது.

ரெட்ரோ படத்தில் இருந்து வெளியான டீசரில் சூர்யா பூஜா ஹெக்டேயின் ஜோடி அசத்தலாக உள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா  படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதுவே அந்த படம் தோல்வியை சந்திக்க காரணமாகவும் அமைந்தது.

தற்போது படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படம் சிறப்பாக இருந்தாலும் சில எதிர்பார்ப்புகள் காரணமாகத்தான் கலவையான விமர்சனங்களும் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளன.

எனவே எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால் அந்த படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று சூர்யாவின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement