• Jan 19 2025

ஒரே நாளில் மோதிய 'ப்ளூ ஸ்டார்' மற்றும் 'சிங்கப்பூர் சலூன்'!முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

'ப்ளூ ஸ்டார்' திரைப்படமானது இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகிய நடிகர்கள் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.  

இதை தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். 


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரௌத்திரம், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளு ஸ்டார் இரண்டு படங்களுக்குமான முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.


அதன்படி, முதல் நாள் முடிவில் சிங்கப்பூர் சலூன் உலகளவில் ரூ. 2 கோடி வசூலித்துள்ளதாம்.

அதேபோல் ப்ளு ஸ்டார் திரைப்படம் ரூ. 80 லட்சம் வசூலை பெற்றுள்ளதாம். 

குறித்த இரண்டு படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் கண்டிப்பாக நல்ல வசூல் வேட்டை நடத்தும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement