• May 19 2024

பிரமாண்ட வீட்டைக் கட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனா- ஹோம் டூர் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் தொகுப்பாளினியாக தனது கெரியரை ஆரம்பித்தவர் தான் ஹேமா.இதன் பின்னர் சீரியல்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார்.


இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தையும் சேர்ந்துக் கொண்டார்.


மேலும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் ஹேமா.


இவர் சென்னையில் பிரம்மாண்டமாக பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.இந்த வீட்டை தற்போது ரசிகர்களுக்காக சுற்றி காண்பித்துள்ளார். வீடு மிகப்பிரம்மாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்,அந்தளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் ஹேமா.இந்த வீடியோவை இவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,



Advertisement

Advertisement