• Sep 13 2024

20 கிலோ வரை எடையை குறைத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை கிருத்திகா - என்ன செய்தார் தெரியமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கிருத்திகா.

தொடர்ந்து நிறைய தொடர்கள் நடித்துவந்த இவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.


பார்க்க இப்போது ஒல்லியாக காணப்படும் கிருத்திகா 20 கிலோ வரை கடுமையான டயட் இருந்து உடல் எடையை குறைத்துள்ளாராம்.

யோகா, தினமும் காலை எழுந்தவுடன் 45 நிமிடம் பயிற்சி செய்வாராம். அதில் சூரிய நமஸ்காரம் மிக மிக முக்கியமாம். அதன்பின் ஜிம் செல்வாராம், வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் ஜிம் சென்று வொர்க்கவுட் செய்வாராம்.

உடல் எடையை குறைக்க கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு அரிசி உணவை எடுத்து கொள்ளவே இல்லையாம்.


அதற்கு பதில் சப்பாத்தி மட்டும் சாப்பிடுவாராம். தினமும் சிக்கன் சாப்பிடுவாராம், அது புரோட்டீனுக்கு உதவியதாம், சில நாட்களில் சிக்கன் பதில் பன்னீர் சாப்பிடுவாராம்.

தொப்பை குறைய தினமும் இரவு 7 மணிக்குள் டின்னர் சாப்பிடுவாராம். வெயிட் லாஸ் செய்ய கிருத்திகா குடித்த ஆரோக்கிய பானம் நெல்லிக்காய், வேப்ப கொழுந்து சேர்த்து அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிப்பாராம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement