• Oct 02 2025

ஒரே ஒரு லவ்.. லைஃப் டைம் மெமரீஸ்.! ரோகிணியின் திருமண போட்டோவை பார்த்தீர்களா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் நகர்ப்புறங்களில் மட்டும் இல்லாமல் கிராமப்புறங்களிளும் அதிகளவாக பார்க்கப்படுகின்றன.  இந்த சீரியலின் கதாநாயகன் முத்துவிற்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கின்றார்களோ, அதே போல வில்லியாக நடிக்கும் ரோகிணி கேரக்டருக்கும் அதிகளவான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். 

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் செயலை  பலரும் திட்டிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் அவருடைய கேரக்டருக்கு பலரும் அனுதாபங்களை  தெரிவித்துக் கொண்டுள்ளனர்.  பொதுவாக சீரியல் நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருந்தாலும், அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களையும் அதே கேரக்டரில் தான் ஏற்றுக்கொள்வார்கள். அதுபோலத்தான் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை சல்மாவையும் ரோகிணியாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். 

ரோகிணி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மா அருண் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அண்ணலட்சுமி என்ற சீரியலில் நடித்தார்.  அதற்கு முன்பு ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தார். ஆனால் அவருக்கு பிரபலத்தைப் பெற்றுக் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் மட்டும் தான்.  இந்த சீரியலுக்குப் பிறகு  சன் டிவி மற்றும் திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன. 


சினிமா மற்றும் சீரியல் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மா அருண்  திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும்,  தனது கணவரின் சம்மதத்துடன் தான் நடிக்க வந்ததாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். 

சல்மாவும் அவருடைய கணவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.  ஆரம்பத்தில் இவர்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்தாலும்  தற்போது எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது என சல்மா பல இடங்களில் சொல்லியும் உள்ளார். 

இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையில் பத்து ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதாக  திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சல்மா அருண். தற்பொழுது இதைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு  தங்களுடைய வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றார்கள். 


Advertisement

Advertisement