• May 19 2024

ரெமோ படத்தைப் போல பிரமாண்டமாக காவேரிக்கு ப்ரபோஸ் பண்ணிய நிவின்- வெளியாகிய ப்ரோமோ

stella / 10 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் மகாநதி.தந்தையை இழந்து நான்கு பெண் பிள்ளைகள் தாயுடன் தனியாக வாழும்போது என்னென்ன போராட்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சீரியலே மகாநதி.

இந்த சீரியலில் தற்பொழுது குமரன் தன்னுடைய மனைவி மற்றும் யமுனா, காவேரி நர்மதா, நிவின் எல்லோரையும் கூட்டிக் கொண்டு சென்னைக்கு ஹனிமூனுக்குச் சென்றுள்ளார்.


அங்கே யமுனா சோகமாக இருக்க நிவின் அட்வைஸ்ட் பண்ணுகின்றார். இதனால் நிவின் மீது யமுனாவுக்கும் காதல் ஏற்பட்டு விட்டது. இப்படியான நிலையில் காவேரியை படம் பார்க்க கூட்டிச் செல்கின்றார் நிவின். தியேட்டரில் காவேரியை இருத்தி விட்டு பாப்கோன் வாங்கி வருவதாகச் செல்ல திரையில் காவேரியை காதலிப்பதாக நிவின் கூறும் வீடியோ போடப்படுகின்றது.

இந்த வீடியோவைப் பார்த்த காவேரி கண் கலங்கி அழுகின்றார். மேலும் நிவின் வந்து காவேரிக்கு காதல் ப்ரபோஸும் செய்கின்றார். இது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement