• Jan 18 2025

கடும் கோபத்தில் அர்ச்சனா... மன்னிப்பு கேட்ட FATMAN ரவீந்தர்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது.மற்ற போட்டியாளர்களை விட மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற விஜே அர்ச்சனா பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார்.

இந் நிலையில் பிக் பாஸ் பற்றி ஒரு சில பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் என  பலர் பிக் பாஸ் பற்றி ரிவியூ கொடுப்பது வழக்கம் . 


அந் நிலையில் FATMAN ரவீந்தர்  பிக் பாஸ் பற்றி ரிவியூ கொடுத்த நிலையில் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா பற்றி கூறும் போது அவர் அர்ச்சனா வின் பண்ண கூடாது என்று  நினைத்த ஒருவரோ தெரியவில்லை. அர்ச்சனாவை பற்றி வாயில் வந்தது எல்லாம் கதைத்ததால் அர்ச்சனாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர் . 


"அர்ச்சனா 13லட்சம் கடன் பெற்றுள்ளார் . கடன் காரர்கள் வீட்டு வாசலில் நிற்கிறார்கள் .முதல் அந்த பொண்ண காச கொடுக்க சொல்லுங்கள் .மற்றும் அர்ச்சனா PR மூலம் தான் வின் பண்ணி இருக்கிறாங்க . 


இவ்வாறு இவர் ரிவியூ கொடுத்ததால் சமூகவலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. ஓவ்வொரு சீசன்லையும் யார் வெற்றி பெற்றாலும்    PRமூலம் தான் வின் பண்ணுகிறார்கள் என்று சொல்வது வழக்கமாக போய் விட்டது என்றும் PR மூலம் வின் பண்ணுகிறார்கள் என்றால் அதற்குரிய ஆதாரத்தை காட்டுங்கள் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர் .


அந்த வகையில் FATMAN ரவீந்தர் தான் கதைத்தது தவறு என்று அவரே மன்னிப்பு கேட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரதீப் ரசிகர்கள் அனைவரும் அர்ச்சனாக்கு  வாக்கு போட்டதாலும் அர்ச்சனா வின் பண்ணி இருக்காங்க என்றும் பல்வேறான வதந்திகள்  பரவி வருகின்றன .


Advertisement

Advertisement