• Jan 18 2025

செகண்ட் லுக்கை வைத்தே கதையை கண்டுபிடித்த ரசிகர்கள்.. ‘விடாமுயற்சி’ எங்கிருந்து சுட்டது தெரியுமா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று திடீரென இந்த படத்தின் இரண்டு சூப்பர் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் அந்த இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டரை வைத்து இந்த படத்தின் கதையை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படம் ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் அல்லது தழுவல் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த போஸ்டரின் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. கடந்த 1997 ஆம் ஆண்டு ’பிரேக் டவுன்’ என்ற ஆங்கில படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தின் தழுவல்தான் ‘விடாமுயற்சி’ என்று கூறப்படுகிறது.

’பிரேக் டவுன்’ படத்தில் நாயகன், நாயகியை தனது புது காரில் அழைத்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென கார் பிரேக் டவுன் ஆகிவிடும். அதன் பிறகு அந்த வழியாக வந்த டிரக் ஒன்றில் தனது மனைவியை ஏற்றிவிட்டு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் இறங்கி விடுமாறும், நான் காரை சரி செய்தவுடன் அந்த ஓட்டலில் வந்து அவரை சந்தித்திக்கிறேன் டிரக் டிரைவர் இடம் கூறி இருப்பார்.

டிரக் டிரைவரும் சரி என்று கூறிய நிலையில் நாயகன் தனது காரை சரி செய்துவிட்டு அந்த ஹோட்டலுக்கு சென்று பார்க்கும் போது அப்படி ஒரு பெண் இங்கே வரவே இல்லை என்று ஹோட்டல் உரிமையாளர் கூறுவார். இதனை அடுத்து அந்த ட்ரக்கை கண்டுபிடித்து அந்த டிரைவரிடம் தனது மனைவி எங்கே கேட்ட போது உங்கள் மனைவி என்னுடைய காரில் வரவே இல்லையே என்று கூறுவார்.
அதன் பின்னர் தான் இந்த சம்பவத்தில் ஏதோ சதி நடந்துள்ளது என்று கண்டுபிடித்த நாயகன் தனது மனைவியை எப்படி தேடி கண்டுபிடிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.. காலையில் அவர் தனது மனைவியை தொலைத்த நிலையில் இரவுக்குள் அவர் மனைவியை கண்டுபிடித்தாரா? என ஒரே நாளில் நடக்கும் கதை தான் பிரேக் டவுன்.

அதேபோல் தான் ‘விடாமுயற்சி’ படத்தின் கதையும் உள்ளதாகவும், அஜித் தனது மனைவி த்ரிஷாவை தொலைத்துவிட்டு இரவுக்குள் அவர் கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் கதை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தீபாவளி அன்று ‘விடாமுயற்சி’ படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கும் நிலையில் இந்த படத்தில்  அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Advertisement

Advertisement