விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது மொத்த குடும்பம் சொந்தமாக கட்டி இருக்கும் புது வீட்டுக்கு போக இருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
ஆனால் மாமியார் வீட்டில் செட்டில் ஆன ஜீவா மீண்டும் குடும்பத்துடன் வந்து சேர்வாரா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. ஜீவா - மூர்த்தி இடையே இருக்கும் கோபத்தை தீர்க்க கதிர், தனம் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்து கொண்டிருகிறார்கள்.
இந்நிலையில் அடுத்து வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவாவின் சட்டையை வில்லன் ஜனார்தனனின் இன்னொரு மருமகன் பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்.
அப்போது அதை பார்த்து கோபமாகும் மூர்த்தி, இடையில் புகுந்து, என் தம்பியையா அடிக்கிற என சொல்லி பதிலுக்கு அடிக்கிறார்.
என்ன தப்பா சொல்லிட்டாரு பிரசாந்த் மாப்பிளை என மீனாவின் அப்பா மூர்த்தியை கேக்குறார் என் தம்பிய எனக்கு முன்னாள தப்பா பேச கூடாது ;உங்க ரெண்டாவது மாப்பிளை ஒசத்தின்னா எனக்கு என் தம்பி ஒசத்தி தான் என சொல்லுகிறார். இதனை கேட்டு ஜீவா கண்கலங்கி நிற்கிறார்.
இவ்வாறாக அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!