• Jan 19 2025

சிங்கம் சிங்கிளா தான் வரும்.. மீண்டும் அட்டாக் போஸ்ட்டா? இது ட்விஸ்டு மேல ட்விஸ்டாலோ இருக்கு..!!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெங்கடேஷ் பட், இயக்குனர், தயாரிப்பாளர்  ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.

முதலாவதாக வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறுவதாகவும் விரைவில் நல்ல செய்தி சொல்வதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருந்தார்.

அதன் பின் இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள். இதனால் அடுத்த சீசன் நடக்குமா? இல்லையா? என்ற குழப்பம் காணப்பட்டது.


இதை தொடர்ந்து, தாமுவுக்கு ஜோடியாக மதம் ரங்கராஜ் இந்த சீசனை தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியானது.அடுத்தடுத்து குக் வித் சீசன் 5இல் பங்குபற்றும் போட்டியாளர்கள் பற்றிய விபரம் வெளியானது.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஆரம்பிக்கலாமா’ என்று கேப்ஷன் போட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார் வெங்கடேஷ் பட். இதனை பார்த்து ரசிகர்கள் மிகவும் குழம்பிப் போய் இருந்தார்கள்.

இந்த நிலையிலும், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்' சிங்கம் சிங்கிளா தான் வரும். நீங்க சொல்லிட்டீங்க நாங்க ஆரம்பிக்கிறோம்' என பதிவிட்டுள்ளார்.

இதனால் புதிய குக்கிங் ஷோ ஒன்று களமிறங்க உள்ளதாக ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement