• Jan 18 2025

மாயா- பூர்ணிமா நட்பு நீடிக்குமா?... ரசிகர்கள் கேள்விக்கு பதிலடி கொடுத்த மாயா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் கலக்கலாக தொகுத்து வழங்கி உள்ளார். இந்த சீசன் ஏகப்பட்ட விமர்சனங்களுடன் கடந்து வந்த நிலையில் ஒரு வழியாக கிராண்ட் பின்னாலியும் வெற்றிகரமாக நிறைவடைந்தது . 


இந்த பிரபலமான ரியாலிட்டி ஷோ கடந்த மூன்று மாதங்களில் ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்கள், மோதல்கள் நிறைந்த ஒரு பரபரப்பான பயணத்தைக் கொடுத்துள்ளது.


வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகி  வெற்றி மாலை சூடப்பட்டார் . மேலும் இந்த சீசனில் மணி சந்திரா மற்றும் மாயா அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுக் கொண்டனர்.


மற்ற சீசன்களையும் விட இந்த சீசன்  மோதல்கள் , திருப்பங்கள் , நட்பு, காதல் என்று கொஞ்சம் அட்டகாசமான சீசன் என்றே சொல்லலாம் . ரசிகர்களையே மடக்கி போட்ட பூர்ணிமா , மாயாவினுடைய நட்பு பெரிதாக பிக் பாஸ் வீட்டில் பேசப்பட்டது மட்டுமல்ல , பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது . அவர்களுடைய நட்பு வெளியே போனால் தொடராது என்றும் ஒரு விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் இருந்ததது . 


அந் நிலையில் பிக் பாஸ் முடிந்து விடவே தற்போது மாயா-பூர்ணிமா வீட்டுக்கு  போயிருக்காங்க . மாயாக்கு பூர்ணிமா வீட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில்   மிகவும் மகிழ்ச்சியா குடும்பத்தோட என்ஜோய் பண்ணி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர் . ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement