• Dec 07 2022

ஜப்பானில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம்..அதுவும் என்ன மொழியில் தெரியுமா?

Listen News!
lathushan / 1 month ago
image
Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தொடக்கத்தில் தனது தந்தையான இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 


அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார் விஜய். மேலும் விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். மேலும் விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.


அதன் பின் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.


மேலும் இவருக்கு உலகம் முழுவதும் அதிகளவான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இன்று வரை விஜய் கதாநாயகனாக 65 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர்.


பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஜப்பான் மொழியிலும் டப் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் சமீபத்தில் தான் ராஜமௌலியின் RRR திரைப்படம் ஜப்பான் மொழியில் வெளியான நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.