• Mar 11 2026

தமிழில் களமிறங்கும் மலையாள நடிகர்,படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

கடந்தாண்டு மலையாள சினிமாவில் வெளியிடப்பட்டு மலையாள ரசிகர்கள் தாண்டி இந்தியாவெங்கும் கொண்டாட பட்ட திரைப்படம் RDX.குறித்த திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் படத்தின் நாயகனான நடிகர் ஷேன் நிகாம்.


தொடர்ந்து வாய்ப்புகள் அவர் வீட்டின் கதவை தட்ட தமிழில் எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி. ஜெகதீஸ் தயாரிக்க 'ரங்கோலி' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஷேன் நிகாமிற்கு வாய்ப்பு கிட்டியது.


'மெட்ராஸ்காரன்' என பெயரிடப்பட்ட இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர்,நடிகர்,நடிகை மற்றும் துணை நடிகர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியதோடு அப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.


Advertisement

Advertisement