• Oct 08 2024

எங்கள் வீட்டு கிருஷ்ணனை பாருங்க- தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் நடிகர் வினோத்பாவின் மகனைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தற்பொழுது சின்னத்திரையில் முக்கியமான நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் வினோத் பாபு.இந் நிகழ்ச்சியில் பிரபல்யமான இவர் சுந்தரி நானும் சுந்தரி நீயும் என்னும் சீரியல் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இதனை அடுத்து தற்பொழுது பவித்ராவுடன் இணைந்து தென்றல் வந்து என்னைத் தொடும் என்னும் சீரியலில் நடித்த வருகின்றார். இந்த சீரியல் ரி. ஆர். பியிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றது. அபி - வெற்றி ஜோடி இணையத்தில் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளது. 


மேலும் இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இது ஒரு காதல் திருமணம் ஆகும். கல்யாணம் முடிந்த கையோடு வினோத் - சிந்து ஜோடி மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.கடந்த ஆண்டு இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.


குழந்தை பிறந்த தருணத்தை வினோத் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார். அந்த பதிவில், " குழந்தை வின்சின் வந்துவிட்டான். அனைவரின் அன்புக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது மகனுடன் வினோத் பாபு, கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடி இருக்கிறார்.

மனைவி சிந்து மற்றும் மகன் வின்சனுடன் வினோத் பாபு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளன. எங்கள் வீட்டு கிருஷ்ணனை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் என கேப்ஷனுடன் வினோத் பாபு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.



Advertisement