• Jan 19 2025

மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடர்பில் பெரிதும் வெளியே தெரியாத ரகசியம்? ஆதவனின் இசை அஞ்சலி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் எல்லா நடிகர்களுக்கும் டஃப் கொடுத்து தனக்கென தனி ரூட்டை அமைத்தவர் விஜயகாந்த். அப்படி பட்ட மனிதர் சமீபத்தில் இந்த உலகை விட்டே சென்றுவிட்டார். 

விஜயகாந்த் மறைந்ததில் இருந்து அவர் பற்றிய நிறைய நல்ல விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அப்படி காமெடி நடிகர் ஆதவன்,  விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியிருக்கின்றார்.


அவர் கூறியதாவது, விஜயகாந்த்திற்கு பதில் வேற யாரும் வரமுடியாது. அவர் எப்பொழுதுமே முற்போக்கு சிந்தனையுடைய ஒரு தலைவர்.அவர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.அதே சமயம் தமிழ் நாட்டு மக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கின்றார்.அவர் இறந்தும் வாழ்கின்றார் அப்பிடீன்னு உருக்கமான கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்.

அதே சமயம் விஜயகாந்த் மறைவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் காமெடி நடிகர் ஆதவன் இசை அஞ்சலி செலுத்தியிருக்கின்றார். 

பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் விஜயகாந்த் இறக்கின்ற மாதிரியான காட்சியின் பொழுது வருகின்ற பாடலை தத்ரூபமாக படியிருக்கின்றார் அது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரால் பகிரப்பட்டுவருகின்றது.

Advertisement

Advertisement