• May 10 2024

வெளியாவதற்கு முன்பே மாஸ் காட்டும் 'லியோ'... ஜெயிலர் வசூலை முறியடிக்கப்போறது Confirm..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும் .


இப்படத்தின் கதாநாயகனாக விஜய் நடிக்க அவருடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் 1மாதம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்னரே சாதனை படைத்து மாஸ் காட்டி வருகின்றது. அந்தவகையில் லியோ படம் ரூ. 434 கோடி ப்ரீ பிசினஸில் ஆகியுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து லியோ படத்தின் ப்ரீ புக்கிங் நேற்று UKவில் தொடங்கியுள்ளது.மேலும்  இதுவரை 2500 டிக்கெட்ஸ் விற்பனை ஆகியுள்ள நிலையில், 50K $ வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. 

இவ்வாறாக ப்ரீ புக்கிங்கில் லியோ படம் மாஸ் காட்டி வருவதையடுத்து 'ஜெயிலர்' வசூலை தட்டித் தூக்கி சாதனை படைக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement