விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்து கொண்ட லாஸ்லியா சமீபத்தில் வீடியோ ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். லாஸ்லியா friend ship , கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்துக் கொண்டதுடன் சமீபத்திலும் இவரது நடிப்பில் வெளியாகிய மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் அமோக வெற்றியை அளித்திருந்தது.
அந்தவகையில் லாஸ்லியாவின் இந்த வீடியோ அவரது அடுத்த திரைப்படத்தின் முன் விளம்பரமாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.அதில் லாஸ்லியா சிவப்பு சேலை அணிந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

லாஸ்லியா சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்த குறும் வீடியோ, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது மனமகிழ்வான நடன அசைவுகள் மற்றும் அழகான முகபாவனைகள் என்பன ரசிகர்களின் மனங்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.
சிவப்பு நிறம் எப்போதும் மினுமினுப்பாகவும் ஜொலிப்பாகவும் இருக்கும், ஆனால் அந்த நிறத்தில் லாஸ்லியா இளவரசி போல காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ரசிகர்களும் கமெண்ட்ஸில், "சிவப்பு சேலையில் தேவதை போல இருக்கிறார்!" என்று பாராட்டி வருகின்றனர். அவரது தனித்துவமான அசைவுகள் இந்த வீடியோவை இன்னும் சிறப்பாக்குகின்றன. வீடியோ இதோ...!
Listen News!