• May 17 2024

கடத்திக் கொண்டு போய் நம்ப வைச்சு ஏமாத்திட்டாங்க- பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் வாழ்க்கையில் இப்படியொரு துயரமா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவருடைய உண்மையான பெயர் சீனிவாசன் என்றாலும் திரையுலகிற்காக தன்னுடைய பெயரில் பவர் ஸ்டார் என்கிற வார்த்தையை அவரே சேர்த்துக்கொண்டார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான, 'லத்திகா' என்கிற படத்தை இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.


இந்த படத்தை தொடர்ந்து,மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்தார்.கடைசியாக கொரோனாவிற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'கேப்மாரி' திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

இதை தொடர்ந்து தற்போது வனிதா விஜயகுமார் ஹீரோயினாகவும், இவர் ஹீரோவாகவும் உள்ள படத்தை இயக்கி நடித்துள்ளார். அவ்வப்போது இந்த படம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இவர் அண்மையில் அளித் பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.


அதாவது பள்ளியில் படிக்கும் போதே டாக்டர் ஆகவேண்டும் என்று நினைத்தேன். இதையடுத்து, அக்குபஞ்சர் மருத்துவர் ஆனேன். மருத்துவமனைக்கு நிறைய கூட்டம் வந்தது. அப்போது தான் உலகம் முழுவதும் நம்ப பெயர் தெரியவேண்டும் என்று, பல பிஸ்னஸ் செய்தேன். ஆனால், அது எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை.  அப்போது ஸ்ரீரடி பாபா கோவிலுக்கு சென்று, நான் பிரபலமாக வேண்டும் அதற்கு உங்கள் அருள் வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு, வீட்டிற்கு வந்தேன். அப்போது, ஒரு பெண் தயாரிப்பாளர் வீட்டிற்கு வந்திருந்தார். அவர், என்னை சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து உனக்காக ஒரு கவிதை என்ற படத்தை எடுத்து தயாரித்தேன். அதன் பிறகு லத்திகா படத்தை தயாரித்தேன்.

லத்திகா படத்தை எப்படியாவது ஓடவேண்டும் என்று முடிவு செய்து அந்த படத்தை 350 நாட்கள் ஓடவைத்தேன். நண்பர் ஒருவரின் தியேட்டரில் அந்த படம் 350 நாட்கள் ஓடியது. படம் பார்க்க வருபவர்களுக்கு குவாட்டர்,பிரியாணி, 100 ரூபாய் பணம் என செலவு செய்து அந்த படத்தை ஓட வைத்தேன். இதற்காக 6 கோடி ரூபாய் செலவு செய்தேன். களத்தில் இறங்கிவிட்டோம் வெற்றியா... தோல்வியா.. பார்த்துவிடலாம் என்கிற எண்ணம் மட்டும் தான் மனத்தில் இருந்தது.


டிரஸ்ட் வைத்து இருந்தேன், ட்ரேடிங், மருத்துவமனை என அனைத்தையும் வைத்து இருந்தேன். அப்போது நான் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தால், உறவினர்கள் அதை கவனித்துக்கொண்டார்கள். ஆனால்,தொடர்ந்து அனைத்திலும் கஷ்டம் வந்ததால் ஒரு கட்டத்தில் என்னால் சமாளிக்க முடியாமல் போய்விட்டது. 

 பணம் இருந்த போது என்னுடன் இருந்தவர்கள் பணம் இல்லாததால் என்னை விட்டு விலகினர். ஒரு நாள் படம் குறித்து பேச வேண்டும் என்று என்னை ஹோட்டலுக்கு அழைத்து, ஒரு மர்ம கும்பல் என்றை கடத்திச் சென்றுவிட்டனர். அதன் பின் நடந்த விசாரணையில் தான் தெரிந்தது கடத்தியது என் சொந்தக்கார பெண் என்று, என்னை நம்ப வச்சி முதுகில் குத்திவிட்டார்கள் என்று பவர் ஸ்டார் மன வருத்தத்துடன் அந்த பேட்டியில் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement