தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக காணப்படும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக ரகு தாத்தா, மாமன்னன், சைரன் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் மாமன்னன் படம் மட்டும் தான் சூப்பர் ஹிட் அடித்தது. ரகு தாத்தா படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்ட போதும் அந்தப் படம் வெற்றி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா, பேபி ஜான் போன்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு பேபி ஜான் படத்திற்கான பட ப்ரொமோஷன் பணிகளில் பங்கேற்று வருகின்றார்.
d_i_a
ஹிந்தியில் ரிலீசாக உள்ள பேபி ஜான் படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலில் கீர்த்தி சுரேஷ் உச்சக்கட்ட கிளாமரை காண்பித்துள்ளார். மேலும் திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேபி ஜான் பட நடிகர் வருனுடன் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து வருகின்றார்.
இந்த படத்தின் ப்ரோமோஷனுகாக கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலியுடன் கிளாமராக உடுத்தி வரும் ஆடைகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. எனினும் திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதையும் காணக் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் புலம்புகின்றார்கள்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் இன்றைய தினம் மும்பையில் இருந்து வரும் போது விமான நிலையத்தில் நடந்து வந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதன் போது கேமரா மேன் அவரை பார்த்துக் கொண்டே தடுமாறிய போது அக்கறையுடன் செயல்பட்ட காட்சியும் வைரலாக உள்ளது. இதோ வீடியோ...
Listen News!