• Feb 05 2025

சரத்குமார் நடிப்பில் சூர்யவம்சம் சீன் ரீ-க்ரியேட்! வைரலாகும் கிவுட் வீடியோ..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சரத்குமாரை தற்போது "THE SMILE MAN" என்ற திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளார். சமீபத்தில் இப் படக்குழு சரத்குமாரை வைத்து மீண்டும் சூர்யவம்சம் சீனை ரீ-க்ரியேட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகர் சரத்குமார் தற்போது  "THE SMILE MAN" என திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லஞ்ச் நிகழ்வு நடைபெற்றது. அப்போது படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் படக்குழுவினர் சூர்யவம்சம் திரைப்படத்தில் உள்ள குடும்பத்துடன் புகைப்படம் எடுக்கும் சீனை மீண்டும் ரீ-க்ரியேட் செய்துள்ளனர். 


அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார், நடிகை ஜிரா ரோஸ், பேபி ஆலியா மற்றும் அவரது தம்பி உட்பட சில இருக்கிறார்கள். காமெடி நடிகர்  ஜாஜ் மரியன் "எல்லாரும் வந்துட்டாங்களா?" என்று கேட்ட பக்கத்தில் இருக்கும் ஆலியா "ஏனுங்க சிண்ராசு.." என்று கேட்கிறார். அதற்கு சரத்குமார் "என்ற குடும்பத்துல எல்லாரும் வந்துட்டாங்க நீங்க போட்டோ எடுங்க" என்று சொல்கிறார். அப்போது ஆலியாவின் தம்பி ஓரமாக இருந்து கவலையுடன் பார்ப்பது போல கொடுக்கும் ரியாக்சன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மீண்டும் சூர்யவம்சம் சீன் பார்த்தது போல உள்ளது என ரசிகர்கள் மெண்ட் செய்து வருகிறார்கள். இதோஅந்த வைரல்  வீடியோ  


Advertisement

Advertisement