• Jan 19 2025

20 ஆண்டுக்கு பிறகு வெற்றி பெற்ற கவுண்டமணி! ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. கவுண்டமணி செந்தில் காம்போவுக்கு என்றே இன்றளவிலும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக  கவுண்டமணி நிலம் ஒன்றை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில்  வழக்கொன்று இடம்பெற்று வந்தது.

அதாவது 1996 இல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம்  நிலத்தை வாங்கி , அதை ஸ்ரீ அபிராமி பௌண்டேஷன்  நிறுவனத்திடம் கொடுத்து  22700 சதுர அடியில் வணிக வளாகம் ஒன்றை அமைத்து 15 மாதங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று 3.58 கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.  


இதுவரையில், 1.04 கோடிரூபா செலுத்த பட்டிருந்த நிலையில் 2003 வரையிலும் கட்டுமான பணிகள் எவையும் நடைபெற இல்லை என கவுண்டமணி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கில் கவுண்டமணியிடம் இருந்து பெற்ற நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் சொத்து மீண்டும் ஒப்படைக்க படும் நாள்  வரையிலும்  மாதம் ஒரு லட்சம் ரூபாவை கவுண்டமணி குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு இட்டார்.

2019-ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து, தனியார் கட்டுமான நிறுவனமான ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் 2021-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்தும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும்  தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Advertisement