• Apr 27 2024

சரளாப் பாப்பாவை எனக்கு ரொம்ப நாளாய் தெரியும்.... 'செம்பி' பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான பிரபு சாலமன் 'காடன்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் 'செம்பி'. நகைச்சுவை நாயகி கோவை சரளா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா, நிலா என்ற 10 வயது குழந்தை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அவர்களோடு இணைந்து இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் உடைய ட்ரெயிலர் ஆனது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ட்ரெயிலரை இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து தற்போது 'செம்பி' திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவானது பிரமாண்டமாக நடைபெற்றிருக்கின்றது. அதில் படக்குழுவினரோடு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், பாக்கியராஜ், கமலஹாசன் உட்படப் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர். 


அந்தவகையில் அவ்விழாவில் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட அதனைப் படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். அவர்களோடு இணைந்து அந்த மேடையில் இருந்த திரைப்பிரபலங்கள் பலரும் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

இதில் கமல்ஹாசன் கூறிய விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது "சரளா பாப்பாவை ரொம்பநாளாய் எனக்கு தெரியும்.

சரளா பாப்பாவை பாக்கியராஜ் அவர்கள் எவ்வாறு உயர்ந்த இடத்திற்கு வருவார் என்று கூறியிருந்தாரோ அதேபோன்று நானும் நிலா என்ற பாப்பாவும் உயர்ந்த இடத்திற்கு வருவார் என்றே கூறுகின்றேன்" என சரளாவிற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்த அதேநேரம் அந்தப் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான நிலாவிற்கும் பாராட்டைத் தெரிவித்து இருக்கின்றார். 

மேலும் "நான் என்ன சொல்ல வர்றேன் என்று சரளா பாப்பாவிற்குத் தெரியும். ஏனெனில் நானும் பாப்பாவாக நடித்திருக்கின்றேன்" என்று கூறி சரளா, அஸ்வின் உட்படப் படக்குழுவினர் பலருக்கும் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கின்றார் உலகநாயகன் கமல்ஹாசன்.

Advertisement

Advertisement

Advertisement