• Apr 27 2024

ஆப்பு வைக்கும் ஜனனி... கதிருக்கு தெரிய வரும் உண்மைகள்...பரபரப்பு திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்...!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியல் ஆனது தற்போது விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ  தற்போது வெளியாகி இருக்கின்றது.

அதாவது  ஜனனி மற்றும் சக்தி இருவரும் அருணை சந்தித்து பேசிய  நிலையில் சக்தியும் அருணும் ஒரே காரில் போனதை பார்த்ததாக ஒருவர் கதிரிடம் கூறிவிடுகின்றார்.


இதனை கேட்டு கதிரும் ஷாக்கடைந்து என்ன அண்ணா சொல்லுறீங்க எனக் கேட்கின்றார்.அதற்கு அவரும் ஆமாம் தம்பி என சொல்லி விடுகின்றார்.


இதனை அடுத்து அருணும் ஆதிரையும் சந்தித்து பேசிக்கொள்ள ஜனனி சக்தி உதவி செய்கின்றனர். என் அண்ணன் பண்ணது மன்னிக்க முடியாத தப்பு அதனால தான் அவருடைய ரூட்டிலேயே போய் அவர தோற்கடிக்க போறோம் என ஆதிரை அருணிடம் திட்டத்தை சொல்கிறார்.


இந்த சமயம் பார்த்து கரிகாலன் அங்கு வர ஜனனி அதை சக்தியிடம் சொல்ல சக்தி கரிகாலனை சமாளிக்க முயற்சி செய்கிறார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement