• May 19 2024

Bigg boss-7 இல் 2வீடுகள் எதற்காக..? வெளியானது உண்மை... அப்போ இந்த சீசனில் சூப்பர் சம்பவமே இருக்கு போல..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என்று எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. 

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய விடயமாக உள்ளது.


அந்தவகையில் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதனை அறியப் பலரும் ஆவலோடு உள்ளனர். இந்நிலையில் இந்த ஷோ எப்படி இருக்கப் போகிறது, இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் அடிக்கடி கசிந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அந்தவகையில் இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தன. இரண்டு வீடுகள் எதற்காக எனப் பலரும் கேள்வி கேட்டு வந்திருந்தனர். தற்போது இதற்குப் பதில் கிடைத்துள்ளது. 


அந்தவகையில் குறித்த இரண்டு வீடுகளில் ஒரு பிக் பாஸ் வீடு அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும் எனவும், மற்றுமொரு பிக்பாஸ் வீடு எந்தவொரு வசதியும் இல்லாமல் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. மேலும் வாராவாரம் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்கள் அந்த வசதி எதுவுமே இல்லாத பிக்பாஸ் வீட்டில் தான் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

அதுமட்டுமில்லாமல் வசதியற்ற வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், மீண்டும் வசதியுள்ள வீட்டுக்குள் செல்ல அவர்கள் சில டாஸ்குகளை செய்யவேண்டும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எது எவ்வாறாயினும் பிக்பாஸில் இரண்டு வீடு கான்செப்ட் என்பது ஏனைய மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே இருக்கின்றது.

ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் மூலமாகத் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement