• Apr 03 2025

மனோஜுக்கு அடிக்க கையோங்கிய ஸ்ருதி..! இதென்னடா புது ட்டுவிஸ்ட்..? புது வீடியோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் சமீபத்தில் 500 எபிசோடுகளை கடந்த சந்தோஷத்தில் கேக் வெட்டி செலிபரேட் பண்ணி இருந்தார்கள். 

விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் நாளாந்தம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் மிகப்பெரிய பேன்ஸ் பேஜ்  காணப்படுகின்றது.

தற்போது சத்யாவின் பிரச்சனை ஒருவாறு முடிவுக்கு வந்ததும், விஜயா வக்கீலிடம் வாங்கிய இரண்டு லட்சத்தை ரோகிணி ஆட்டையை போட்டு விடுகின்றார். ஆனாலும் அந்தப் பழியும் மீனா மீது தான் விழுகின்றது. எனினும் விஜயா சத்யாவின் கேசை வாபஸ் வாங்கியதற்காக வக்கீலிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார் என்ற உண்மை முத்து மற்றும் வீட்டாருக்கு தெரிய வருகிறது.

d_i_a

இதனால் அசிங்கப்பட்ட விஜயா இதுக்கெல்லாம் ஒரே வழி மலேசியா போவது தான் என்று ஒரு பிளான் போடுகின்றார். இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார். இதே வேளை ஏனையவர்களின் தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி வர ரோகினி பற்றிய ஒரு சம்பவம் கூட இன்னும் வீட்டாருக்கு தெரியவில்லை. இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் ஸ்ருதி, மனோஜ் இணைந்து ரில்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் மனோஜ்க்கு ஓங்கி குத்துமாரு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

அதாவது, குறித்த ரில்ஸில் ஸ்ருதி மனோஜ்க்கு அடிப்பது போல ரில்ஸ் செய்துள்ளார்.. இதை பார்த்த ரசிகர்கள் மனோஜ் ரொம்ப  மோசம். அதனால் அவருக்கு நாலு போடு போடுங்க என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். 

Advertisement

Advertisement