• Jan 19 2025

கமலாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஈஸ்வரி? கோபி கொடுத்த அதிர்ச்சி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், கமலா பாக்யா வீட்டிற்கு வந்து என்னுடைய மாப்பிள்ளையை நீங்கள் எப்படி வீட்டில் வைத்து இருக்கலாம் என்று சத்தம் போடுகின்றார்.

அதற்கு பாக்கியா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அத்தை உள்ள இருக்காங்க.. போய் அவங்க கூட கதைங்க என்று சொல்லுகிறார். இதன்போது உள்ளே சென்ற கமலா ஈஸ்வரி உடன் சண்டை போட, அவன் என் புள்ளை உங்க வீட்டுக்கு அனுப்பி அவனை பலி கொடுக்க நான் தயாராக இல்லை என்று ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறார்.

ஆனாலும் ராதிகா தான் அவர் தாலி கட்டின பொண்டாட்டி அங்க தான் கோபி இருக்க வேண்டும் என்று சொல்ல, அங்கு அனுப்ப முடியாது என்று ஈஸ்வரி உறுதியாக சொல்லுகிறார். மேலும் வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்றால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவேன் என கமலாவை விரட்டி அடிக்கின்றார்.

d_i_a

அதன் பின்பு பாக்கியா சப்பாத்தி செய்து கொண்டிருக்க அங்கு வந்த ஈஸ்வரி கோபிக்கு சாப்பாடு செய்யுமாறு மறைமுகமாக  சொல்லுகிறார். ஆனாலும் தான் செய்ய முடியாது என்று சொல்ல, நானே செய்கின்றேன் என்று கோபிக்கு இடியாப்பமும் தேங்காய் பாலும் செய்கின்றார்.


அதன் பின்பு கோபியை சாப்பிட வைத்து அழகு பார்க்கின்றார். மறுபக்கம் ராதிகா கோபியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு உள்ளார். அதற்கு கமலா உனக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று சொல்ல, குழந்தை இல்லாதது தான் நல்லம். இல்லை என்றால் நான் அந்தப் பிள்ளையை வைத்து வளர்த்திருக்க வேண்டும் என்று ராதிகா வருத்தப்படுகிறார்.

இன்னொரு பக்கம் கோபி தனது வீட்டாருடன் சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்து பேசி இருக்கின்றார். மேலும் திடீரென எப்படி ஹார்ட் அட்டாக் வந்தது என்று ஈஸ்வரி கேட்க, அன்றைக்கு இனியா  கதைத்ததை நினைத்து நிறைய வருத்தப்பட்டேன் என்று சொல்கிறார்.

இதை கேட்ட இனியா, அப்படி என்றால் என்னால்தான் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததா என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement