• May 18 2024

லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வனிதா விஜயகுமாரின் மகனா?- அடடே இந்த சீனை மறந்திட்டோமே?

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 ஸ்க்ரீன்களில் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். 

டிக்கெட் விலை எவ்வளவு இருந்தாலும் அதுகுறித்து எந்த கவலையும் படாமல் டிக்கெட் வாங்கினர்.முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் தங்களுக்கு பரம திருப்தியை தந்திருப்பதாகவும் லோகேஷ் கனகராஜின் மேக்கிங் விஜய்யின் நடிப்பு அன்பறிவ் மாஸ்டர்ஸின் சண்டை காட்சி என அனைத்துமே அட்டகாசமாக இருப்பதாக பூரிக்கின்றனர். 


அதுமட்டுமின்றி படத்தின் லொக்கேஷன் பெரிய ப்ளஸ் எனவும் கூறி வருகின்றனர். அத்தேடு அனிரூத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது என்றும் கூறி வருகின்றனர்இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா மகன் லியோ படத்தில் இருக்கிறார் என்ற தகவல் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார், அதில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் என்று காண்பிப்பார்.


அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீ ஹரிதான். இந்தப் புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement