• May 11 2024

4மணிக்கு விஜய்யை அந்த இடத்திற்கு கூட்டிச் சென்ற தந்தை... குதிரையிலிருந்து கீழே குதித்த தளபதி... அட இவங்களுக்குள்ள இப்படி ஒரு கதை இருக்கா.?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பினையும் தாண்டி தன்னுடைய சிறந்த நன்னடத்தை மற்றும் அமைதியான சுபாவம் என்பவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை வென்ற ஒரு நடிகர் என்றால் அது நம்ம விஜய் தான். இவர் இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராகவும் விளங்கி வருகின்றார்.  


இவரது நடிப்பில் அடுத்தடுத்ததாக பல படங்கள் ரிலீசாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்த வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு தற்போது தன்னுடைய 66-ஆவது படமான 'வாரிசு' படத்தில் கமிட்டாகி சிறப்பாக நடித்து வருகிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் ஆனது ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை என அடுத்தடுத்த பல இடங்கில் நடத்தப்பட்டு தற்போது ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது இப்படமானது பொங்கலிற்கு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வருகின்ற விஜய்க்கு திரையுலகில் கதாநாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்த படம் இவரது தந்தையின் இயக்கத்தில் அமைந்த 'நாளைய தீர்ப்பு'. இந்நிலையில் இப்படத்திற்கு இவர் எப்படித் தயாராகினார் என்ற செய்தி தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. 

அதாவது இது தொடர்பாக ஹிட் லிஸ்ட் படத்தின் பூஜையில் பங்கேற்ற இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது "விஜய் நடிக்க விரும்பியபோது அதற்காக 6 மாதங்கள் அவரை தயார் செய்ததாகவும், அந்த 6 மாதங்களும் தினந்தோறும் காலை 4 மணிக்கு விஜய்யை எழுப்பி பீச்சுக்கு இழுத்துக் கொண்டு போவேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் "அங்கு சென்று குதிரையேற்றம் உள்ளிட்டவற்றிற்கு அவருக்கு பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளித்ததாகவும் குதிரையில் இருந்து பீச்சில் குதி என்றதும் உடனடியாக அவர் அதை டெடிகேஷனுடன் செய்வார்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது "விஜய்யின் இந்த டெடிகேஷன்தான் அவரது வெற்றிக்கு காரணம்" என்றும் அவரது தந்தை கூறியிருக்கின்றார்.

சினிமாவைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நடிகனும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக தன்னை சிறந்த பயிற்சிக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டு சினிமாவில் நுழைந்தால் தான் வெற்றி உறுதி. முதல் படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சினிமாவில் நிலைக்க இந்த திறமைகளே உதவும் என்றும் எஸ்ஏசி அந்நிகழ்வில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement