• Sep 14 2024

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பஞ்சமா? மூன்று முக்கிய படத்திலும் மலையாள நடிகைகள்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் விக்ரம் நடித்த தங்கலான், சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படங்கள் ஆகியவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகவும் காணப்படுகின்றது.

இந்த திரைப்படங்கள் தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும் கொட்டுக்காளி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் முன்பே பல விருதுகளை தனதாக்கி கொண்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ் இயக்குனர்களை தங்களுடைய படத்திற்கு தமிழ் நடிகைகளை தேர்வு செய்யாமல் மலையாள நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்கள். இது நியாயமா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

அதாவது தங்கலான் படத்திற்கு சியான் விக்ரமுடன் நடிப்பதற்கு ஜோடியாக மலையாள நடிகையான பார்வதியை தெரிவு செய்திருந்தார் ரஞ்சித். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில் ஹீரோயினாக பார்வதி நடித்திருந்தார்.


அதேபோல சிவகார்த்திகேயன் தயாரிப்பில், வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளி படத்தில் அன்னா பென் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் பெரிதாக எந்த வசனத்தையும் பேசாமலேயே தனது பார்வையால் ஸ்கோர் செய்துவிட்டார்.


மேலும் பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களை கொடுத்த மாரி செல்வராஜின் நான்காவது படம் தான் வாழை. இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்ற போதும் எமோஷனல் ரீதியாக இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்திலும் முதன்மையான ரோலில் மலையாள நடிகையான நிகிலா விமல் நடித்துள்ளார்.


இவ்வாறு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்போடு காணப்பட்ட மூன்று  திரைப்படங்களிலுமே மலையாள நடிகைகள் தான் நடித்துள்ளார்கள். ஏன் தமிழில் திறமையான நடிகைகளே இல்லையா? என மலையாள நடிகைகள் நடித்திருப்பது தமிழ் ரசிகர்கள் மனதில் பெரும் கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனாலும் தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகைகள் இருந்த போதும் புதுமுக நடிகைகளுக்கும் ஹிட் படங்கள் அமையாததாலும், அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காததாலும், தொழில் போட்டி வாய்ப்புகளை தேடி பெரும் வழிமுறையில் பின் தங்கிய நிலை போன்ற பல காரணங்களினால் பிரபலநாயகிகள் நீண்ட காலங்களுக்கு திரை உலகில் நீடித்திருக்க முடியவில்லை என சினிமா வட்டாரங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement