• May 10 2024

மிரட்டும் வெண்பா... திருமணத்திற்கு ஓகே சொன்ன பாரதி..வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா. இதில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக வெண்பா கர்ப்பம் ஆகியுள்ளார்.

தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் ரோஹித் என தெரிந்தும் பாரதியை தனக்கு தாலி கட்டச்சொல்லி வற்புறுத்தினார். எனினும் அதற்கு பாரதி செவிசாய்க்காத காரணத்தினால் தற்கொலை முயற்சியில் வெண்பா ஈடுபட்டார்.


எப்படியோ வெண்பாவை காப்பாற்றி வைத்தியசாலையில் பாரதி சேர்த்துவிட்டார். இதன்பின் வைத்தியசாலையிலும் தன்னை திருமணம் செய்துகொள்ள வில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று கத்தியை எடுத்து  பாரதியை மிரட்டுகிறார் வெண்பா.


இதனால் வேறு வழியில்லாமல் வெண்பாவை திருமணம் செய்ய ஓகே என கூறிவிட்டார் பாரதி. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், பாரதி உங்க தியாகத்திற்கு ஒரு அளவு இல்லையா என்று கலாய்த்து கூறி வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement