• May 28 2026

என்னடா நடக்குது தியேட்டர்ல; எல்லாரும் சாமி ஆடுறாங்களே.! 'கருப்பு' குறித்து சீமான் ஓபன்டாக்

shali / 2 days ago

Advertisement

Listen News!

R. J.பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் கிராமத்து பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படம், குறிப்பாக குடும்ப ரசிகர்களிடையே நல்ல பேசுபொருளாக மாறியுள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடிவரும் இந்த படம், சூர்யாவின் நீண்ட நாள் வெற்றிப் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், சீமான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “என் தம்பி சூர்யாவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ‘கருப்பு’ திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. 

இந்த படத்தில் வரும் கருப்பசாமி சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்த்து பலர் உணர்ச்சிவசப்பட்டு சாமி ஆடும் அளவிற்கு மக்கள் மனதோடு படம் ஒன்றிணைந்திருக்கிறது. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.” என்று கூறியுள்ளார்.

சீமான் கூறிய இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, “கருப்பு” படம் வெறும் வணிக வெற்றியை தாண்டி, மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் தொட்டிருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement