• Jun 17 2026

புதிய இயக்குநரின் மாஸ் என்ட்ரி கொடுத்த கீர்த்தி.. சத்தியவான் சாவித்திரி ரிலீஸ் தேதி இதோ

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் ‘சத்தியவான் சாவித்திரி’. நீதிமன்ற பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், உணர்ச்சி, சட்டம் மற்றும் மனித உறவுகளை ஒருங்கிணைக்கும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர்-நடிகர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சத்தியவான் சாவித்திரி திரைப்படம் முழுக்க முழுக்க நீதிமன்ற சூழலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சட்டப் போராட்டங்கள், உண்மை–பொய் மோதல்கள், மனித உறவுகளின் சிக்கல்கள் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது. 


Advertisement

Advertisement