தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் சூர்யா, சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அந்த வெற்றிக்குப் பிறகு அவர் நடித்துள்ள புதிய படம் தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகிறது
வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இது சூர்யாவின் 46-வது திரைப்படமாக தயாராகி
இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி, படத்தொகுப்பை நவீன் நூலி செய்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது, இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு பணிகளில் ஒரு பகுதியாக, முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ பாடலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நாளை முழு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புரோமோவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பாடலின் முழு வடிவத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.
சூர்யாவின் முந்தைய படங்களின் வெற்றியும், புதிய கூட்டணியின் வலுவும் சேர்ந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்துள்ளது.
#VASFirstSingle ~ #Pattampoochi / #NenoButterfly Promo is out now ✨
▶️ https://t.co/GQs7mCuVVx
Full song on June 19th 🫶🏻#VishwanathAndSons #VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @gvprakash @vamsi84 @NavinNooli @NimishRavi @sublahshini @Arunrajakamaraj… pic.twitter.com/51AMWCRCQ7
Listen News!