• Jun 18 2026

ரேகாவின் ஒரு வீடியோ.. சிந்தாமணியின் திட்டம் சுக்குநூறா உடையுமா.? முத்துவின் மாஸ்டர் பிளான்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாட்டி வீட்டில் இருக்கும் ரேகாவுக்கும் சத்யாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் செய்து வைப்பதற்கு திட்டம் போடுகின்றனர்.

எனினும், அதற்கிடையில் சிந்தாமணி இரண்டு வீட்டிற்கும் எந்தப் பிரச்சினையும் செய்து விடக்கூடாது என்பதற்காக, ரேகாவை வைத்து ஒரு வீடியோ எடுக்கின்றார்கள். அதில், “நான் என்னுடைய விருப்பப்படிதான் காதலித்து வீட்டை விட்டு வெளியே வந்தேன். என்னை யாரும் தேட வேண்டாம்” என்று ரேகா கூறுகின்றார்.

இதைத் தொடர்ந்து விஜயா வீட்டுக்கு சென்ற சிந்தாமணி, முத்துவை அழைத்து “என்னுடைய மகளை எங்கே கடத்தி வைத்திருக்கின்றாய்?” என்று கண்டபடி திட்டுகின்றார். இதனால் கோபப்பட்ட மீனா, “உன் பிள்ளை உன்னுடன் இருக்க விருப்பம் இல்லாமல்தான் வீட்டை விட்டு வெளியே போய்விட்டது” என்று பதிலடி கொடுத்து அனுப்புகின்றார்.


பின்பு விஜயா, “எதற்கு இந்தத் தேவையில்லாத வேலை?” என்று முத்து, மீனாவிடம் கேட்க, அவர்கள் நடந்தவற்றை கூறுகின்றனர். ஆனாலும் மனோஜ், இதனால் தனக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடுமோ என்று புலம்புகின்றார்.

இறுதியில், முத்துவும் மீனாவும் ஆங்கில வகுப்பிற்கு செல்லும் போது, அங்கு ஸ்வேதா எல்லோரிடமும் நடந்த விஷயத்தை சொல்லி அவர்களுக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுக்கின்றார். அந்த நேரத்தில், முத்துவும் மீனாவும் சத்யாவின் காதலை சேர்த்து வைப்பதற்கு உங்களுடைய உதவி தேவைப்படும் என்று கூறுகின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement