விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, இன்றைய தினம் ரேகாவை ஹாஸ்பிடலில் இருந்து பாதுகாப்பாக கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு முத்துவும் மீனாவும் அழைத்து வருகின்றார்கள்.
இதன்போது பாட்டியின் வீட்டில் வைத்து அவர்களுக்கு காதல் திருமணம் செய்வது பற்றிய உரையாடல்கள் நடைபெறுகின்றன. மேலும் சிந்தாமணி பற்றி எனக்கு தெரியும் என்பதால், முத்து மீனாவை ஜாக்கிரதையாக இருக்குமாறு பாட்டி எச்சரிக்கின்றார்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான கதைக்களம் தொடர்பான பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அதன்படி, சத்யா ரேகாவின் திருமணத்தை மும்முரமாக நடத்துவதற்கு முத்துவும் மீனாவும் திட்டமிடுகின்றார்கள். அதற்காக சத்யாவின் அம்மாவையும் அக்கா சீதாவையும் வரவழைத்துள்ளனர்.
இந்த விடயம் சீதா மூலம் அருணுக்கு தெரிய, அருண் சிந்தாமணியின் காதுக்கு இந்த விஷயத்தை கூறி விடுகின்றார். இதனால் அலர்ட் ஆன சிந்தாமணி பாட்டியின் ஊருக்கு வந்து அங்கு பெரிய கலாட்டா ஏற்படும் சூழ்நிலை உருவாகின்றது.
இதற்கு இடையில், ரேகா, சத்யா திருமணத்தை நடத்துவதற்காக முத்துவும் மீனாவும் போராட, மறுபக்கம் அவர்களிடமிருந்து தன்னுடைய மகளை மீட்பதற்காக சிந்தாமணி அடியார்களுடன் கலாட்டா செய்கின்றார். இதுதான் தற்போது நடக்கும் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை யூகித்து வருகின்றனர்.
எனவே இனிவரும் எபிசோடுகளில் ரேகா சத்யாவின் திருமணம் எவ்வாறு நடக்கப்போகின்றது, சிந்தாமணியின் பாதுகாப்பை மீறி ரேகா திருமணம் செய்வாரா, இதில் முத்து மீனா வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!