• Jun 18 2026

தந்தையின் புகழ் மகனுக்கு கைகொடுக்குமா? பரபரப்பை கிளப்பும் தகவல்!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பன்முகத் திறமையுடன் திகழ்ந்து வருகின்றார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்தில் நடித்துவருவதுடன், மேலும் பல புதிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த நிலையில், தனது மூத்த மகனான யாத்ராவை விரைவில் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் திரை வட்டாரங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, யாத்ரா அறிமுகமாக உள்ள திரைப்படத்தை நடிகர் தனுஷே தயாரிக்க உள்ளதாகவும், அந்த படம் இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்ற உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை அம்சம் மற்றும் ஏனைய முக்கிய அம்சங்கள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், யாத்ராவுக்கான பொருத்தமான கதைக்களத்தை தேர்வு செய்வதில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அது மட்டுமல்லாமல், இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

அதேபோல், யாத்ராவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் யார், இயக்குநர் யார், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் உள்ளிட்ட விவரங்களும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவை குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகலாம் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷ் தற்போது தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள நிலையில், அவரது மூத்த மகன் யாத்ராவும் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால், யாத்ராவின் திரையுலக அறிமுகத்திற்காக தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement