தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. முதலமைச்சர் விஜய் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் நீண்ட நேரமாக அவரைக் காண காத்திருந்த பொதுமக்களை கண்டதும் விஜய் தனது காரை உடனடியாக நிறுத்துமாறு கூறி, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி நேரடியாக மக்களிடம் சென்ற தகவல்கள் பரவி வருகின்றன.

அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் கைகுலுக்கி, அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடி இருந்தார். குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பலர் விஜயை அருகில் இருந்து பார்த்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ததாக சமூக வலைத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வு குறித்து ரசிகர்கள், “மக்களை மதிக்கும் தலைவர்” என பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அரசியல் வட்டாரங்களிலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Listen News!