• Jun 18 2026

அரசன் படத்திற்கு மீண்டும் சிக்கலா? ஒரே வரியில் எதிர்பார்ப்பை எகிற வைத்த சிம்பு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் திரைப்படங்களில் ஒன்று ‘அரசன்’. இந்த படத்தில் இயக்குநர் வெற்றிமாறனுடன் நடிகர் சிலம்பரசன் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே உச்சத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை ஏமாற்றத்திலும் கவலையிலும் ஆழ்த்தியிருந்தன.

இந்நிலையில், அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘அரசன்’ திரைப்படம் மீண்டும் முழுவீச்சில் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளது. இதனால் படக்குழுவினரும் ரசிகர்களும் புதிய உற்சாகத்தில் உள்ளனர்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வடசென்னையின் ரத்தமும், வியர்வையும், அரசியலும், கேங்க்ஸ்டர் உலகின் இருண்ட பக்கங்களும் கலந்து உருவாகும் கதையாக ‘அரசன்’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் மற்றொரு பெரிய பலமாக அதன் நட்சத்திர பட்டாளம் பார்க்கப்படுகிறது. சிலம்பரசனுடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் கதையின் முக்கிய அங்கங்களாக இணைந்துள்ளனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானபோது, படம் திட்டமிட்டபடி உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக வெற்றிமாறன் படங்கள் தாமதமாவது புதிதல்ல என்ற பேச்சுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை தீபாவளி வெளியீடாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் படக்குழு வேகமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த் நிலையில், நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புதிய பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன், சிம்பு மற்றும் பிரபல சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் ஆகியோர் ஒன்றாக இடம்பெற்றுள்ளனர்.


அதனுடன் “Arasan In Action Mode” என சிம்பு குறிப்பிட்டிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளுக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.

குறிப்பாக வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்த பீட்டர் ஹெய்ன், தற்போது ‘அரசன்’ படத்திலும் அதிரடி காட்சிகளை வடிவமைத்து வருகிறார். இதனால் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட படம், இன்று மீண்டும் முழு வேகத்தில் முன்னேறி வருவது ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி உருவாக்கும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தால், அது ஆண்டின் மிகப்பெரிய சினிமா நிகழ்வுகளில் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

Advertisement