• Jun 18 2026

ஜேசன் சஞ்சய்க்கு ஆபத்தா.? இதயம் முரளி முதல் ஜனநாயகன் வரை வலைப்பேச்சு கொடுத்த அதிரடி

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வழியாகவும் புதிய விடயங்கள் பற்றி பல்வேறு யூடியூபர்களும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் மிகவும் பிரபலமான யூடியூப் சேனலாக வலைப்பேச்சு சேனல் காணப்படுகிறது.

இதில் மூன்று பேர் சினிமா வட்டாரத்தில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள், ரிலீஸ் அப்டேட் மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை தங்களுடைய தனித்துவமான பேச்சில் பகிர்ந்து வருகின்றார்கள். இதனால் அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கியதும் உண்டு.

இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் டீமில் உள்ளவர்கள் சினிமா வட்டாரத்தில் உள்ள புதிய தகவல்களை பகிர்ந்து உள்ளார்கள். அதன்படி ஜனநாயகன் முதல் கட்டா குஸ்தி 2, அதர்வா நடிக்கும் இதயம் முரளி படம் பற்றி பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவற்றை விரிவாக பார்ப்போம்.

அதன்படி முதலில் நடிகர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றாரா இல்லையா என்ற விவாதம் மீண்டும் கூடி முடிந்துள்ளது. அதன் பற்றி அந்தணன் கூறுகையில்,

விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்கலன்னா அது அவரோட விருப்பம். அதையே பெரிய பிரச்சனையா உருவாக்குறது தேவையில்லாத டிபேட். ஆனா அரசியலுக்கு வந்துட்டா மக்கள் கேள்வி கேப்பாங்கன்னு மட்டும் மறக்கக்கூடாது.


அதே மாதிரி அவரோட மகன் ஜேசன் சஞ்சய் பத்தியும் பிரஸ் மீட் பண்ணுவாரா இல்லையான்னு தேவையில்லாத விவாதம் போகுது.

ஜனநாயகன் படம் ஜூன் 26 ரிலீஸ் ஆகலாம் என்ற தகவல் இண்டஸ்ட்ரியையே அதிரவச்சிருக்கு.இப்போ வரைக்கும் சென்சார் சர்டிபிகேட் கூட உறுதியா கிடைக்கல. அப்படியே 19ம் தேதி சென்சார் கிடைச்சா தான் 26 ரிலீஸ் சாத்தியம். இல்லனா முழு பிளான் மாறிடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் உருவாகும் புதிய படம் பற்றி வந்த வதந்திகளுக்கு கிளாரிட்டி வந்திருக்கு.

ரியா சிபு நடிக்கிறாங்கன்னு சொன்னதும் ஹீரோயின் மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா அது உண்மையில்லை. அது ஒரு முக்கியமான கேரக்டர் தான். ஹீரோயின் கிடையாது  என்று தெரிவித்துள்ளனர்.


அதே நேரத்தில் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் தயாரிப்பு சார்ந்த குழப்பம் இன்னும் தீரல. படத்தை யார் ரிலீஸ் பண்ணப்போறாங்கன்னு கூட இன்னும் தெளிவில்ல. விஷ்ணு விஷால் தான் முன்னேறி ரிலீஸ் பண்ணணும்னு உறுதியா இருக்காரு. பேச்சுவார்த்தை நடக்குது என்று தெரிவித்துள்ளனர்.

இறுதியாக அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படம் ரிலீஸ் நெருங்குது. அதர்வாவுக்கு இப்போ நல்ல காற்று அடிக்குது. சரியா இந்த படம் ஹிட் ஆச்சுன்னா அவர் ரீ-எமர்ஜ் ஆக வாய்ப்பு இருக்கு.

அதேபோல ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் டேட் மாறிக்கிட்டே இருக்குன்னு பேசப்படுது.

ஆகஸ்ட் இல்ல, செப்டம்பர், இல்ல தீபாவளி டார்கெட்ன்னு மாறிக்கிட்டே இருக்கு. இண்டஸ்ட்ரி முழுக்க பிளானிங் ரொம்ப டைட் ஆகிடுச்சு.

இதனால சூரி படம், சிவகார்த்திகேயன் படம் எல்லாம் தங்களோட ரிலீஸ் டேட்டை மாற்றிக்கிட்டு இருக்காங்க.

இப்போ தமிழ் சினிமா முழுக்க ரிலீஸ் தேதியே பெரிய பஞ்சாயத்து. படம் எடுக்குறதை விட ரிலீஸ் பண்ணுறது தான் பெரிய தலைவலி ஆகிடுச்சு என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement