• Jun 18 2026

விஜய் ஜெயிச்ச பிறகுதான் நினைவு வந்ததா?... ராகவா லாரன்ஸை வெளுத்து வாங்கிய யூடியூபர்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் சூழலில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி, கட்சி வளர்ச்சி மற்றும் சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது. அந்த வீடியோவில் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலத்தில் பலரும் அவரை விமர்சித்ததாகவும், தற்போது முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பலர் அவரை ஆதரிப்பது போல் நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்து பேசிய அவர்,  விஜய் கட்சி ஆரம்பிச்சப்போ இப்படி சப்போர்ட் பண்ணல. இப்ப ஜெயிச்சு முதலமைச்சர் ஆன பிறகு திடீர்னு அரசியலுக்கு வர்றேன், மக்கள் கூப்பிடுறாங்கன்னு சொல்றது புரியல. யாரும் கூப்பிடல, இவரே வந்து நான் வரப்போறேன், அறிவிப்பேன் என்று பேசிக்கிட்டு இருக்காரு. திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படாத நேரத்திலேயே சிலர் சீட் கிடைக்கும்னு கணக்கு போடுற மாதிரி தெரிகிறது என்று கூறினார்.

மேலும் , முதல்ல ரஜினி சார் அரசியலுக்கு வர்றப்போ இப்படி பேசல. இப்ப விஜய் முதலமைச்சர் ஆன பிறகு மட்டும் அவரோட பக்கம் வர்றது ஏன்? விஜய்யின் பெயரையும் பிரபலத்தையும் பயன்படுத்திக்கிட்டு அரசியல் வாய்ப்பு தேடுற மாதிரி தெரியுது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


அதேபோல் சமூக சேவைகள் மூலம் பிரபலமான கே.பி. பாலா பற்றியும் அவர் கூறுகையில், உதவி பண்றதுல தப்பே இல்லை. ஆனா சிலர் உதவி செய்றதை விட அதைப் பற்றிய விளம்பரம் அதிகமா இருக்கு. மக்கள் எல்லாரும் உதவிக்காக காத்திருக்கிறாங்க, நாங்கதான் காப்பாத்துறோம் என்ற மாதிரி ஒரு பிம்பம் உருவாக்கப்படுது. இதை மக்கள் கவனமா பார்க்கணும்  என்று கூறினார்.

இறுதியில், புது ஆட்சி என்பதால் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம். அதுக்காக கேள்வியே கேட்கக்கூடாது என்று சொல்ல முடியாது. நல்லது நடந்தா பாராட்டணும், தவறு நடந்தா கேள்வி கேட்கணும். அதுதான் ஜனநாயகம்  என்று அவர் தெரிவித்தார்.

இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ராகவா லாரன்ஸ் மற்றும் கே.பி. பாலா குறித்து அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன.

Advertisement

Advertisement